Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி லால்குடி தொகுதியில் பாரிவள்ளலுக்கு ஆதரவாக கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பாரி வள்ளலை ஆதரித்து, திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் லால்குடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்,

குறிப்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் பாரி வள்ளலின் வெற்றிக்காக அனைவரும் ஒற்றுமையுடன் களப்பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.வாக்கு சேகரிப்பின் போது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும்.


தேர்தல் நேரத்தில் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் கழகத்தின் கோட்டையாக விளங்கும் லால்குடியில், பாரி வள்ளல் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சரும்,திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்கள், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனைகளல வழங்கினார்.இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர்கள் வைரமணி, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *