Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அதிமுக ஆட்சி அமைந்த உடன் கருணாநிதி மரணம் குறித்து விசாரிக்கப்படும் – திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்,மேற்கு தொகுதி அமமுக வேட்பாளர் ராஜசேகரன்,ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் மனோகரன்,திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் ப.குமார் ,மணப்பாறை தொகுதி வேட்பாளர் விஜயகுமார்,முசிறி தொகுதி வேட்பாளர் யோகநாதன்,லால்குடி தொகுதி வேட்பாளர் லீமாரோஸ்மண்ணச்சநல்லூர் தொகுதி வேட்பாளர் பரதன்( சிங்கத்தமிழர் முன்னேற்ற கழகம்)துறையூர் தொகுதி வேட்பாளர் சரோஜா ஆகியோரை ஆதரித்து திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அந்த பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தேசிய ஜனநாய கூட்டணி இயற்கையான கூட்டணி, மக்கள் விரும்பும் கூட்டணி வெற்றி கூட்டணி.
ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய்.
அவர்கள் செய்யும் தவறுகளை விமர்சனம் செய்கிறோம்.நாம் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்கிறோம். நம்மை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தால் அதை விட 10 மடங்கு நாம் விமர்சிப்போம்
திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி பெருகியதாக கூறுகிறார்கள் ஆனால் அதிமுக ஆட்சியில் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் தான் தொழில் வளர்ச்சி வளர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு மூல காரணம் அதிமுக அரசாங்கம் தான்.ஸ்டாலின்,மக்களை ஏமாற்றி ஏமாற்றி ஐந்தாண்டுகளை முடித்து விட்டார்.அதிமுக ஆட்சி இருக்கும் போதே பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்திற்கு வந்து விட்டது.

திமுக ஆட்சியில் விவசாய வளர்ச்சி 3 சதவீதம் தான் ஆனால் அதிமுக ஆட்சியில் 5.5 சதவீதம் இருந்தது.திமுக ஆட்சியில் விவசாயம் நலிந்து விட்டது.திருச்சி சிவா காமராஜர் குறித்து கொச்சைப்படுத்தி பேசினார்.
காமராஜர் காலத்தில் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்தது. ஜெயலலிதா இருந்த போது காமராஜருக்கு தனி மரியாதை கொடுப்பார்கள்
ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை திமுகவினர் இழிவாக பேசினார்கள்கருணாநிதி உடல் நலன் சரியில்லாத போது வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என ஆ.ராசா கூறினார். அது உண்மையா இல்லையா என்பதை நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் விசாரிப்போம். தவறு இருந்தால் நிச்சயம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். 2021 தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா மறைவு குறித்து விசாரிக்கப்படும் என திமுக கூறியது அதே போல கருணாநிதி மறைவு குறித்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விசாரிப்போம் என கூறுகிறோம்.

திருச்சியில் திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் சிறுநீரகத்தை முறைகேடாக எடுத்துள்ளார்கள். இதை திமுக அரசே கூறி உள்ளது.அதிமுக ஆட்சிக்கு வந்த பின் சிறுநீரக முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.பத்திரிகை சுதந்திரத்தை ஸ்டாலின் நசுக்கி விட்டார் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் மிகப்பெரிய ஊழல் செய்துள்ளார். அமலாக்கத்துறை அறிக்கை கொடுத்தும் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்த பின் அது குறித்து விசாரித்து தவறு இருக்கும்பட்சத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்று ஊழல் செய்தார்கள்.
ஸ்டாலினுக்கு கப்பம் கட்டி அவர் (செந்தில் பாலாஜி) சிறைக்கு சென்றது தான் மிட்சம்
200 அரசு பள்ளி கூடங்களை இன்றைய பள்ளி கல்வி துறை அமைச்சர் மூடி விட்டார்
சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போய் உள்ளது.சிறுமிகள் முதல் வயதான பாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
திமுக ஆட்சி அமைந்த பின் 18 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6999 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
அதிமுக ஆட்சி அமைந்த உடன் மூன்று மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.
தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீரை தடுத்து அணை கட்டுவோம் என கூறிய கர்நாடக அமைச்சரை தேர்தல் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் அழைத்து வந்துள்ளார். விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளார்கள் என்றார்.அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என கூறி முடித்தார்.
இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*

*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *