திருச்சியில் இன்று காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்பி, திருச்சி வேலுச்சாமி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் திருச்சி வேலுச்சாமி மற்றும் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததால், காங்கிரஸ் தொண்டர்களுக்கு பசி வயிற்றை கிள்ளத்தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இரண்டு மணியளவில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேச ஆரம்பித்தவுடன், நேரம் ஆகஆக பொறுத்ததுபோதும் என பொங்கியெழுந்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் முண்டியடித்துக் கொண்டு பூட்டி இருந்த கதவை தள்ளிக்கொண்டு, உணவருந்தும் அறைக்குள் நுழைந்தனர்.

அப்போது பூட்டியிருந்த கதவை தள்ளிக்கொண்டு உண்டியடித்து உள்ளே சென்றபோது கதவின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments