திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். மேற்கு தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
51-வது வார்டுக்கு உட்பட்ட செடல் மாரியம்மன் கோயில் தெரு, ரெட்டி தெரு,பொன்விழா நகர்,தேவர் புது தெரு,ஹீபர் ரோடு,கூனி பஜார் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் கே.என்.நேரு தனது ஆதரவாளர்களுடன் மக்களை சந்தித்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது, அப்பகுதி மக்கள் அவருக்குச் சால்வை அணிவித்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதே நமது நோக்கம் எனவும் கடந்த காலங்களில் செய்த நலத்திட்டங்களையும், வருங்கால வாக்குறுதிகளையும் மக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்.

இந்த நிகழ்வில் மாநகர செயலாளர் மாநகர மேயர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கல ந்து கொண்டனர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
*Youtube*






Comments