தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் துணைத்தலைவரும்,
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக நான்கு முறை மாபெரும் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றி நம் அனைவரின் மனதிலும் நிலைத்து நின்று வாழும், அன்பு அண்ணன் L.அடைக்கலராஜ் அவர்களின் 13 வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு தியாகி அருணாச்சலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட பொருளாளர் முரளி அவர்களின் முன்னிலையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மலைக்கோட்டை கோட்ட தலைவர் வெங்கடேஷ் காந்தி, காட்டூர் கோட்ட தலைவர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் கோட்ட தலைவர் அழகர், ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல், எஸ்சி பிரிவு காளியபெருமாள், கலைபிரிவு அருள்,
ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், நிர்வாகிகள் கம்பராசம்பேட்டை தர்மராஜ்,பூபாலன், ராமர், சாந்தி, மாசிலாமணி, கண்ணன், பாண்டியன், சையது, கண்ணன், எழில் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments