Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

விட்டமின் ‘ப’ வைத்து கொண்டு பந்தா காட்டும் லால்குடி வேட்பாளர் – கூட்டணி கட்சியினரை லெப்டில் டீல்

திருச்சி மாவட்டத்தில் லால்குடி சட்டமன்ற தொகுதி முக்கிய தொகுதிகள் பட்டியலில் உள்ளது. கடந்த நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ செளந்திர பாண்டியனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. திமுகவின் புது வேட்பாளரை களத்தில் இறக்கிய அரசியல் தந்திரம் என்பது தெரியவில்லை அது அவர்களின் கணக்கு. தற்போது திமுக சார்பில்

வேட்பாளர் பாரிவள்ளல் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் லீமாரோஸ், தமிழக வெற்றி கழகம் சார்பாக கு.ப.கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களத்தில் உள்ளனர். ஊரை விட்டு புதிதாக வந்து அனைத்திலும் பந்தா காட்டும் லீமா ரோஸ் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். அவர் இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அவரின் நடவடிக்கைகள் கூட்டணி கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மிக முக்கியமாக அவரை சந்திக்க வருபவர்களை சிறு வயதில் உள்ளவர்களை உதவியாளர்களாக வைத்து மரியாதை குறைவாக நடத்துவதாக புகார்களும் எழுந்துள்ளது.

அதிமுக கட்சியில் புதிதாக வந்து சேர்ந்து உடனடியாக வேட்பாளராக இடம் பிடித்து விட்டார். இவரை விட அத்தொகுதியில் கட்சியிலும் வயதிலும் மூத்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இதையெல்லாம் அவர் பொறுப்பெடுத்தாமல் விட்டமின் ‘ப’ வைத்து இந்த தொகுதியில் வென்று விடலாம் என எண்ணத்தில் உள்ளார். லால்குடி மக்கள் அவ்வளவு சீக்கிரம் ஒருவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.கிராமப்புற பகுதி அதிகம் நிறைந்த தொகுதி.
இவரை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் இவரை விட ஒவ்வொரு கட்சியிலும் மூத்தவர்கள் அதைவிட முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் இதில் போட்டியிடுகிறார். முத்தரையர் வாக்குகள் உள்ளிட்ட பெருவாரியான வாக்குகளை பெறுவதற்கு அவர் திட்டமிட்டு உள்ளார். இதே போல் பாரிவள்ளலும் தனது சமுதாய வாக்குகள் மற்றும் அனைத்து வாக்காளர்களின் வாக்குகளையும் பெற்று வெற்றி பெற தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.ஆனால் லீமா ரோஸ் வெற்றி பெறுவது கடினம் என அவரது கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களே முனுமுனுக்க ஆரம்பித்து விட்டனர். அந்த அளவுக்கு ஒத்துழைப்பு தராமல் கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்லாமல் தான் வெற்றி பெற்று விட்டதாகவே எண்ணி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருவதாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.


லால்குடி தொகுதியில் திமுக கடந்த 4 தேர்தலில் நங்கூரமிட்டு தொடர்ந்து வெற்றியை பெற்று வந்தது. இந்த முறை களத்தில் வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதைவிட மிக முக்கியமாக அதிமுக வேட்பாளர் உடன் இருப்பவர்கள் தமிழ்நாட்டில் அல்ல இந்தியாவிலேயே ரிச்சஸ்ட் வேட்பாளர் நாங்கள் தான் என்று மார்தட்டி கொள்கின்றனர். இப்பவே இப்படி பந்தா காட்டும் இவரின் ஆதரவாளர்கள் உடன் இருப்பவர்கள் நாளை வெற்றி பெற்றால் ஒருவரையும் மதிக்க மாட்டார்கள் என்பதை கூட்டணி கட்சியினரும் லால்குடி தொகுதி மக்களும் நேரடியாகவே பேசி வருகின்றனர். வாக்காளர்களை கவர ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான நூதன முறை பரப்புரையில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் இவர் மட்டும் பந்தாவாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது ரத்தத்தின் ரத்தங்கள் இடையே பெரும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *