Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வழக்கறிஞரிடம் ரூ. 5 லட்சம் மோசடி: தில்லைநகர் நிதி லிமிடெட் இயக்குநர்கள் தலைமறைவு.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரிடம், முதிர்வடைந்த வைப்புத்தொகையைத் திருப்பித் தராமல் ஏமாற்றி, அலுவலகத்தைப் பூட்டிவிட்டுத் தலைமறைவான நிதி நிறுவன இயக்குநர்கள் மீது சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை நங்கநல்லூர், TNGO காலனி 4-வது தெருவில் வசிப்பவர் திரு. ராம்பிரகாஷ் ராஜகோபால். இவர் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ள வழக்கறிஞர் ஆவார். திருச்சி, தில்லைநகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் “தில்லைநகர் நிதி லிமிடெட் (TNL)” என்ற நிறுவனத்தில், கடந்த 2018-ம் ஆண்டு முதல் உறுப்பினராகச் சேர்ந்து முதலீடு செய்து வந்துள்ளார்.


இந்நிறுவனத்தின் மறைந்த இயக்குநர் அய்யாசாமி பிள்ளை மூலமாக அறிமுகமான இவர், தற்போது அதன் அதிகாரப்பூர்வ இயக்குநர்களாகப் பொறுப்பு வகிக்கும் திருமதி. விஜயலட்சுமி மற்றும் திரு. ஹரிஷ் சங்கர் ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ் முதலீட்டைத் தொடந்துள்ளார்.
வழக்கறிஞர் ராம்பிரகாஷ், TNL FD 1 திட்டத்தின் கீழ் (உறுப்பினர் எண்: M00193) ஐந்து லட்சம் ரூபாயை முதலீடு செய்திருந்தார். இந்த வைப்புத்தொகை கடந்த 15.10.2025 அன்று

முதிர்வடைந்துள்ளது. ஆனால், முதிர்வுத் தேதி கடந்தும் இயக்குநர்கள் ரூ. 5 லட்சம் பணத்தைத் திருப்பித் தராமல் இழுத்தடித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் இது குறித்து இயக்குநர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவர்கள் பணத்தைத் தருவதாகப் பலமுறை போலி வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ராம்பிரகாஷ் திருச்சியில் உள்ள தில்லைநகர் மேற்குப் பகுதியில் இயங்கி வந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதையும், இயக்குநர்கள் இருவரும் அலுவலகத்தை எங்கோ மாற்றிவிட்டுத் தலைமறைவாக இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.


தன்னுடைய 5 லட்சம் ரூபாய் பணத்தைத் திட்டமிட்டு மோசடி செய்துள்ளதாகக் கூறி, பழவந்தாங்கல் காவல் நிலையக் குற்றப்பிரிவில் வழக்கறிஞர் ராம்பிரகாஷ் புகார் மனு அளித்துள்ளார். அதில், தலைமறைவாக உள்ள இயக்குநர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து, தனது முதிர்வுத் தொகை மற்றும் அதற்கான வட்டியை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *