மத்திய அரசு நாடாளுமன்றத்தில் (11.8 2023) அன்று மசோதாக்களை தாக்கல் செய்தது. இதில் தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம்( ஐபிசி) குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி) மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ( ஐ.ஈ.ஏ) ஆகிய மூன்று சட்டங்களின் பிரிவுகளை முழுமையாக மாற்றியமைத்ததோடு வடமொழி தலைப்புகளை வைத்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு பகுதிகளில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு மூன்று சட்டங்களின் பிரிவுகளை மாற்றம் செய்து பெயர்களை வடமொழியில் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி நீதிமன்ற வளாகம் முன்பாக சுமார் 50க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் மத்திய அரசின் புதிய சட்ட பிரிவிற்கு வரவேற்பு அளித்து பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments