Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மகேஷ் பொய்யாமொழியின் வெற்றி, முதல்வருக்கு நாம் அளிக்கும் முதல் வெற்றி!” – அமைச்சர் கே.என்.நேரு அதிரடி.

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம், பெல் (BHEL) தொமுச தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

தலைமை மற்றும் முன்னிலை
திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் மற்றும்
கூட்டணி கட்சி நிர்வாகிகளான:
ராஜலிங்கம் (காங்கிரஸ் தெற்கு மாவட்டச் செயலாளர்)
ரெக்ஸ் மாமன்ற உறுப்பினர்
தேவராஜ் (கொங்கு தேச தமிழ் மக்கள் கட்சி)


மணவை தமிழ் மாணிக்கம் (மதிமுக)
ராஜ்குமார் (சிபிஐ மாவட்டச் செயலாளர்)
டி.வி. கணேஷ் (தேமுதிக மாநகர மாவட்டச் செயலாளர்)
சேகர் (சிபிஎம்) மற்றும் திருவரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதி ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முதல் முறை வேட்பாளர் போன்ற உணர்வு: “மூன்றாவது முறையாக நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், முதல் முறை போட்டியிடும் வேட்பாளரைப் போலவே மக்களுக்காகப் பணியாற்றுவதையே எனது கடமையாகக் கருதுகிறேன்.”
சென்டிமென்ட் தளம்: “2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் எந்த இடத்தில் வைத்து நான் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டேனோ, அதே இடத்தில் 2026 தேர்தலுக்கும் என்னை அறிமுகப்படுத்த வருகை தந்துள்ள அண்ணன் கே.என்.நேரு அவர்களை வரவேற்கிறேன். அவர் திருச்சி மேற்கு தொகுதியில் அமோக வெற்றி பெற வாழ்த்துகிறேன்.”


தொகுதி மேம்பாட்டுப் பணிகள்: “திருவெறும்பூர் தொகுதியில் கழிவறை, பட்டா மற்றும் சாலை வசதி போன்ற பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஜல்லிக்கட்டு மைதானம் சூரியூரில் அமைக்கப்பட்டதும், தமிழகத்தின் முதல் மாதிரிப் பள்ளி நமது தொகுதியில் திறக்கப்பட்டதும் நமக்குப் பெருமை.”மீதமுள்ள வாக்குறுதிகள்: “மக்களின் கோரிக்கைகளில் 70 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட இதர கோரிக்கைகள் அனைத்தும் தேர்தல் முடிந்து மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் முழுமையாக நிறைவேற்றப்படும்.”
முடிவுரை:
தேர்தலுக்கு இன்னும் 23 நாட்களே உள்ள நிலையில், நிர்வாகிகள் அனைவரும் அயராது உழைத்து மீண்டும் திமுக ஆட்சியை அரியணையில் ஏற்றப் பாடுபட வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். இறுதியாக, தமக்கு உறுதுணையாக இருக்கும் பெல் தொமுச தொழிலாளர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

திருவெறும்பூர் தொகுதியில் மகேஸ்
பொய்யாமொழியின் வெற்றி, முதல்வருக்கு நாம் அளிக்கும் முதல் வெற்றியாக இருக்க வேண்டும்: அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
திருச்சி:


திருவெறும்பூர் தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

“அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகுதான் அந்தத் துறைக்கே ஒரு தனிப் பெருமை கிடைத்துள்ளது. திருவெறும்பூர் தொகுதியில் அவர் மூன்றாவது முறையாகப் போட்டியிட வேண்டும் எனப் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுத் தந்துள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் திருவெறும்பூர் தொகுதியில் மகேஷ் பொய்யாமொழியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்த வெற்றி நமது வெற்றியாக அமைய வேண்டும்.”

“திருவெறும்பூர் தொகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. பெல் (BHEL) தொழிற்சங்கத்தில் அதிமுக ஆட்சிக் காலத்திலும் திமுகதான் முதன்மையான சங்கமாக இருந்துள்ளது. 1974 முதல் 1989 வரை இப்பகுதி கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக இருந்தது. 1996-க்குப் பிறகு திமுக தலைவரிடம் பேசி, இந்தத் தொகுதியை நாம் மீட்டெடுத்துத் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம். மீண்டும் இந்தத் தொகுதியைத் தக்க வைப்பது நமது கடமை.”

“திமுக கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளை நாம் எப்போதும் மதிக்கிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருச்சியில் துறையூர் (காங்கிரஸ்), மணப்பாறை (மமக), திருச்சி கிழக்கு (இனிக்கோ) என இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் திருவாரூரில் தொடங்கி, இரண்டாவதாகத் திருச்சியில் தொடங்குகிறார். திருச்சி உழவர் சந்தையில் நடைபெறும் காலைப் பொதுக்கூட்டம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைய வேண்டும். அண்டை மாவட்டமான கரூரில் நடைபெறும் கூட்டத்தை விட, திருச்சியில் அதிகப்படியான தொண்டர்கள் திரண்டு நமது பலத்தை நிரூபிக்க வேண்டும்.”

“திருவெறும்பூர் தொகுதியில் 30,000 முஸ்லிம் வாக்காளர்கள், 20,000 கிறிஸ்தவ வாக்காளர்கள் மற்றும் 45,000 தொழிலாளர் வாக்குகள் உள்ளன. அனைவரும் ஒற்றுமையாகப் பாடுபட்டால், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மகேஷ் பொய்யாமொழி வெற்றி பெறுவது உறுதி. அடுத்த 10 ஆண்டுகளுக்கான முதல்வரின் ஏழு கனவுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, தமிழக முதல்வருக்கு நாம் அளிக்கும் முதல் வெற்றியாக மகேஷின் வெற்றி இருக்க வேண்டும்.”
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *