மக்களை தேடி  மருத்துவம் சோமரசம்பேட்டை அரசு சித்த மருந்தகத்தில்   ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி தொடங்கி வைத்தார்

மக்களை தேடி  மருத்துவம் சோமரசம்பேட்டை அரசு சித்த மருந்தகத்தில்      ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி தொடங்கி வைத்தார்

திருச்சி,கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள ஆயுஷ்  மருத்துவமனைகள் மருந்தகங்கள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மக்களை தேடி  மருத்துவம் என்னும் நிகழ்ச்சி  நடத்தப்பட இருக்கிறது.

 இது தொடர்பாக திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ் காமராஜ் கூறியதாவது,
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவுபடி திருச்சி, கரூர் பெரம்பலூர்,அரியலூர் மாவட்டங்களில் உள்ள 125 மருத்துவமனைகள் மருந்தகங்கள் மூலமாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மக்களை தேடி  மருத்துவம் நிகழ்வு  நடத்தப்படும்.

 ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை  காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணி வரை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பகுதியில் ஒரு நிகழ்வு நடத்தப்படும்.


ஒவ்வொரு கிராமங்கள்  நடத்தப்படும் நிகழ்வில் சுகாதார பணிகள் இணை இயக்குனர், துணை இயக்குனர்,  சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட சித்த மருத்துவ அலுவல,ர் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் யாரேனும் ஒருவர் முன்னிலையில் நிகழ்வு நடத்தப்படும்.

 இந்த நிகழ்வின் நோய்கள் வரும் காரணம், அதை தடுக்கும் வழிமுறைகள் நோய்களுக்கான தமிழ் மருத்துவம், மருந்துகள் குறித்து விளக்கம், சேர்க்க வேண்டிய தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து விளக்கப்படும்.


சோமரசம்பேட்டை அரசு சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு சிறப்பு சித்த மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

இம்முகாமை ஸ்ரீரங்கம்  தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  பழனியாண்டி தொடங்கி வைத்தார்.
இனி தொடர்ந்து ஒவ்வொரு வாரம் செவ்வாய் கிழமைகளிலும் மக்களை தேடி மருத்துவம் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK


டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn