‘சிரா இலக்கியக் கழகமும்’, ‘சிரா பதிப்பகமும் இணைந்து, கவிஞர் பாட்டாளி தொகுத்த மலைக்கோட்டை எழுத்தாளர்கள்’ தொகுதி – ஒன்று நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. சிரா இலக்கியக் கழகத்தின் தலைவரும், கவிஞருமான முனைவர் பா. ஸ்ரீராம் தலைமை வகித்தார்.மேஜர் டோனர் சீனிவாசன், திருக்குறள் சு. முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மூத்த எழுத்தாளர் மழபாடி ராஜாராம் நூலினை வெளியிட, எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி,தமிழ்ச் செம்மல் கவிஞர் வீ. கோவிந்தசாமி, கவிஞர் சுமித்ராதேவி மாதவன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்ட நூலில் இடம் பெற்ற எழுத்தாளர்கள் நூலினை பெற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர், ‘சொல்வல்லார்’ கவிஞர் நந்தலாலா, முனைவர் சு. செயலாபதி, தனலட்சுமி பாஸ்கரன், இளம் பேச்சாளர் பிரபு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சிரா இலக்கியக் கழகம் நூலாசிரியர் கவிஞர் பாட்டாளிக்கு ‘படைப்பரசன்’ விருதினை வழங்கினர்.
நூலாசிரியர் கவிஞர் பாட்டாளி ஏற்புரையாற்றினார். முன்னதாக கவிஞர் ம.அருள்மொழிவர்மன் வரவேற்க நிறைவாக கவிஞர் பா. சுகுமாரி நன்றி கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments