2025ம் ஆண்டு நிறைவுசெய்து 2026 ஆம் ஆண்டு ஆங்கிலபுத்தாண்டு பிறந்ததையொட்டி, தென் கைலாயம் என போற்றப்படும் மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவிலில் மாணிக்கவிநாயகர் சன்னதியில் பக்தர்கள்

நீண்டவரிசையில் நின்று முழுமுதற்கடவுளை வழிபட்டு, புத்தாண்டில் தொடங்கும் காரியங்கள் யாவும் சித்திபெறவேண்டி விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
மாணிக்கவிநாயகர் மூலவர் சந்தன காப்பு அலங்காரத்திலும், உற்சவர் சிறப்பு அலங்காரத்திலும் காட்சியளித்துவருகிறார்

மேலும் கடந்த காலங்களிலிருந்த கஷ்டங்கள் நீங்கி பிறந்திருக்கும் புத்தாண்டு எல்லோருக்கும் நன்மை தரும் ஆண்டாக அமையவும் கடந்த ஆண்டில் செய்த பாவங்கள் நீங்கவும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments