ரயில் தண்டவாளத்தில் தலை வைத்த மன்சூர் அலிகான்.திமுக மற்றும் அதிமுக ஆகிய கூட்டணிகளில் இடம் கிடைக்காததால், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் நடைபெறவுள்ள தேர்தலில் தனித்துப்போட்டியிடுகிறார். இக்கட்சி சார்பில் மன்சூர் அலிகான் உள்ளிட்ட 4 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள லால்குடி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள மன்சூர் அலிகான் திமுக வாக்காளர்களை கவரும் வகையில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து நூதன பிரச்சாரம் செய்தார்.வட இந்திய தொழிலதிபர் ராமகிருஷ்ண டால்மியா, அங்கு ஒரு சிமெண்ட் தொழிற்சாலையை நிறுவிய பிறகு, ‘கல்லக்குடி’ என்ற ஊரின் பெயரை ‘டால்மியாபுரம்’ என மாற்றினார். இந்த பெயர் மாற்றத்தை எதிர்த்து, மீண்டும் ‘கல்லக்குடி’ என்றே பெயர் சூட்ட வலியுறுத்தி, திமுக வரலாற்றில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் (மு.கருணாநிதி) ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்தி சிறை சென்று வெற்றி பெற்றார்.

அதனை நினைவு கூர்ந்து திமுகவின் வாக்குகளை பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு மன்சூர் அலிகான் இன்று தண்டவாளத்தில் தலை வைத்தார்.
ரயில் தண்டவாளத்தில் தலை வைத்த மன்சூர் அலிகான்



Comments