திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் வாரந்தோறும் திங்கள் கிழமை மேயர் மு.அன்பழகன் அவர்கள், தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் உள்ள குறைகளை மனுக்களாக மேயர் அவர்களிடம் கொடுக்கிறார்கள் அந்த மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் மேயர் அவர்கள் மாநகராட்சி அலுவலர்களுடன் மற்றும் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்களுடன் உரிய கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
08.09.2025 அன்று நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் மண்டலம் 4 வார்டு எண் 53 க்கு உட்பட்ட கணபதி நகர் பகுதி பொதுமக்கள் சாலை வசதி சீர்படுத்தியும், மழை நீர் வடிகால் முறைப்படுத்த வேண்டி மனு அளித்தார்கள் அந்த மனுவை இன்று 09.09.2025 நேரடி ஆய்வு செய்ய மேயர் மு.அன்பழகன் அவர்கள் நேரில் மண்டல தலைவர், உதவி ஆணையர், உதவி செயற் பொறியாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் நேரில் பார்வையிட்டு பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்ற சாலைகளை அமைத்து தரவும், மழை நீர் வடிகால் வாய்க்காளை வடிகால் பகுதி வரை கொண்டு சென்று மழைநீர் தேங்காத வண்ணம் அமைத்து தர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
முன்னதாக அப்பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் நகர பொறியாளர் திரு.பி. சிவபாதம், உதவி செயற் பொறியாளர், திரு.வேல்முருகன் மற்றும் மாமன்ற உறுப்பினர் திருமதி. ஜெ. கலைச்செல்வி, மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments