திருச்சி திருவெறும்பூர் தொகுதி
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
ஹாட்ரிக் வாய்ப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் மீண்டும் வெற்றி பெற்றால், அது அவரது தொடர்ச்சியான மூன்றாவது (ஹாட்ரிக்) வெற்றியாக அமையும்.

கடந்த 2021 தேர்தலில் தற்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி (திமுக) திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்
கடந்த தேர்தலில் (2021) அன்பில் மகேஸ்யிடம் தோல்வியை சந்தித்த அதிமுக வேட்பாளர் ப.குமார் தற்போது (2026) மீண்டும் அதேதொகுதியில் அன்பில் மகேஸ்யை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிடவுள்ளார்.
நாடாளுமன்ற திருச்சி தொகுதி உறுப்பினராக இரண்டு முறை (2009 முதல் 2019 வரை) வெற்றிபெற்று பணியாற்றிய, அதிமுக வேட்பாளர் ப. குமார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை எதிர்த்து மீண்டும் போட்டியிடுகிறார்.
திமுக வை தோற்றுவித்த முன்னோடி தலைவர்களில் ஒருவரான அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், அவரது மகன்கள் அன்பில் பொய்யாமொழி மற்றும் அன்பில் பெரியசாமி ஆகியோர் வெவ்வேறு காலக்கட்டங்களில் திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களின் வாரிசுகளில் ஒருவரான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று, தற்போதைய கல்வித்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments