திருச்சி திருவெறும்பூர் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் வார்டு 36 ரயிலநகர், கீழ அம்பிகாபுரம், மேல் அம்பிகாபுரம், ரத்தினசாமி தெரு, கோல்டன் நகர், காவேரி நகர், திடீர் நகர், ஜெகநாதபுரம், ஸ்டாலின் நகர், ஆகிய இடங்கள்இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர்
மு. மதிவாணன், பகுதிக் கழகச் செயலாளர் நீலமேகம், மாமன்ற உறுப்பினர் KKK. கார்த்தி, வட்டக் கழகச் செயலாளர்கள் ஆனந்த், சுரேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
வாக்குச் சேகரிப்பின் போது பொதுமக்களிடையே உரையாற்றிய அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததாவது:
மக்களுக்கு நன்றி: “கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்கள் ஆதரவோடு இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகிறேன். தமிழகத்தில் உள்ள 1.29 கோடி மாணவர்களின் கல்விப் பொறுப்பை முதல்வர் என்னிடம் வழங்கியதற்கு, தாய் வீடான திருவெறும்பூர் தொகுதி மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்ததே முக்கியக் காரணம்.”
காலை உணவுத் திட்டம்: “இன்று தமிழகம் முழுவதும் 20 லட்சம் பள்ளிப் பிள்ளைகள் பசியின்றி கல்வி கற்க ‘காலை உணவுத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது என்றால், அந்தப் பெருமை என்னை தேர்ந்தெடுத்த உங்களையே சாரும்.”
கோரிக்கைகள் நிறைவேற்றம்: “2016-2021 காலகட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோது, நிதிநிலை மற்றும் அரசியல் சூழலால் 10-ல் 3 கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற முடிந்தது. ஆனால், தற்போது நமது ஆட்சி அமைந்த பிறகு, உங்களின் 10 கோரிக்கைகளில் 7 கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளேன். விடுபட்ட மீதமுள்ள பணிகளும் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்தவுடன் விரைந்து முடிக்கப்படும்.”
அரசு திட்டங்கள்: “இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், மகளிருக்கு விடியல் பேருந்து பயணம் மற்றும் மகளிர் உரிமைத்தொகை போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்களை முதல்வர் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். இந்த மக்கள் நலத்திட்டங்கள் தொடர, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை மீண்டும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.”
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments