2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்களால் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
வேட்பாளர் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தனது சொந்தத் தொகுதியான திருவெறும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று உற்சாகமாகத் தனது தேர்தல் பணிகளைத் தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக, தொகுதியின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள முக்கியத் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் இன்று காலை முதல் பின்வரும் இடங்களில் மரியாதை வழங்கினார்:
பி.ஹெச்.எல் (BHEL) வளாகம்: அங்குள்ள அண்ணா சிலை, அம்பேத்கர் சிலை மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
காட்டூர்: தந்தை பெரியார் சிலைக்குப் பெருந்திரளான தொண்டர்களுடன் வந்து மரியாதை செலுத்தினார்.
ஆயில் மில் செக் போஸ்ட்: இப்பகுதியில் அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.
கலைஞர் அறிவாலயம்: அறிவாலய வளாகத்தில் அமைந்துள்ள தனது தாத்தாவும், கழக முன்னோடியுமான ஐயா அன்பிலார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து ஆசி பெற்றார்.

இந்த நிகழ்வின் போது மாநகரக் கழகச் செயலாளர்
மு.மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம் தர்மராஜ் விஜயக்குமார் சிவக்குமார் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கருணாநிதி கங்காதரன் துவாக்குடி நகரக் கழக செயலாளர் காயம்பு பேரூர் கழகச் செயலாளர் தங்கவேலு மற்றும் கழக நிர்வாகிகள், தொமுச நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
திருவெறும்பூர் தொகுதி க்கு ரூபாய் 450 கோடிக்கு மேலான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாதிமுக வேட்பாளரா அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்
திருவெறும்பூர் தொகுதியின் மூன்றாவது முறையாக என்னை போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முதல்வர் ஆசியுடன் தற்போது கிளம்பி உள்ளேன். இந்த ஐந்து ஆண்டு காலத்தில் தமிழக முதல்வர் நாட்டு மக்களுக்கு செய்துள்ள பல்வேறு நல திட்டங்களை தோழமைக் கட்சிமட்டும் பாராட்டவில்லை நமது எதிரியாக நினைக்கக்கூடிய கட்சிகளும் கொள்கை எதிராக நினைக்கக் கூடிய கட்சிகளும் பாராட்டுகிறது

அந்த பலம் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பிரதிபலிக்கும்.வரும் மே மாதம் 4ம் தேதி திராவிட மாடல் 2.0ஆட்சி பதவியேற்கும்என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உள்ளது.
முதல் வாக்காளர்கள் யாராக இருந்தாலும் எந்த கட்சி என்ன செய்துள்ளது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் நாங்கள் சொல்வதைக் கூட நம்ப வேண்டாம் இன்று இருக்கும் டெக்னாலஜி மூலம் அதனை நீங்களே பார்த்துக் கொள்ளலாம்
அரசு என்ன செய்துள்ளது என்று தெரியும்
ஏன் திராவிட மாடல் என்று சொல்கிறோம் ஏன் பாராட்டுகிறோம் அவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதை நான் சொல்வதைக் காட்டிலும் டெக்னாலஜியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் சட்டமன்ற உறுப்பினராக ஒரு கிராமத்திற்கு என்ன தேவை ஒரு சீரணி அரங்கம், குடிநீர் டேங், பள்ளி கட்டிடம், சமுதாயக்கூடம், ஸ்மார்ட் கிளாஸ் ரூம், மக்களின் நீண்ட நாள் பிரச்சினைகளாக இருக்கக்கூடிய வீட்டு மனை பட்டா தமிழர்களின் வீர விளையாட்டாக உள்ள ஜல்லிக்கட்டு விழாவிற்கு தமிழ்நாட்டில் இரண்டாவது ஆக சூரியூரில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டை விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது
இது அரசு நமது தொகுதியில் கட்டி கொடுத்துள்ளது நமக்கு பெருமை நமது தொகுதியில் மாடல் பள்ளியை துவாக்குடி பகுதியில் கட்டியது அது நமக்கு பெருமை

ரேஷன் கடையை கட்டிக் கொடுப்பதாக இருந்தாலும் சாலைகளை அமைத்துக் கொடுப்பதாக இருந்தாலும் குடிநீர் வசதி செய்து கொடுப்பதாக இருந்தாலும் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து ரூ450 கோடிக்கு மேலான வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது
புதிதாக கட்டப்பட்ட காமராஜர் அறிவுசார் மையம் நூலகம் திருச்சி மாவட்டத்தின் இன்னொரு அடையாளமாக தற்பொழுது உள்ளது
நான் சார்ந்துள்ள மாவட்டத்திற்கு செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும் அந்த ஆசை மட்டும் போதாது அதற்கு உரிய செயல் இருக்க வேண்டும் செயல் மட்டும் போதாது அதற்குரிய நிதியை பெற வேண்டும் அதற்கான தமிழக முதலமைச்சரின் பார்வை திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து இருப்பதால்தான் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ளமுடிந்தது
திருவெறும்பூர் தொகுதியில் மட்டும் 17 ஆயிரம் குடும்பத்திற்கு வீட்டு மனை பட்டா பெற்றுக் கொடுத்துள்ளோம்.

தேர்தல் என்பது இன்னொரு நாள் மக்களுக்கான பணி தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
தாய் வீடாக இருக்கும் திருவெறும்பூரில் உள்ள ஒவ்வொரு சகோதரசகோதரிகளை சந்தித்து வாக்கு கேட்பேன்.
நாங்கள் தற்போது செய்துள்ளது கூறியும் குறிப்பாக ஒலிம்பிக் அகாடமி கொண்டு வந்துள்ளோம் இது விளையாட்டு துறையை சார்ந்துள்ளது ஒரு தொகுதியில் எல்லாமே இருக்கிறது என்ற அளவிற்கு அந்த தொகுதியை மாற்ற வேண்டும் அது எனது ஆசை.
ரேஷன் கடை சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு உள்ளோம் அவற்றை அனைத்தையும் நாங்கள் செய்து முடித்து விட்டதாக கூற முடியாது 10 ல் 7 செய்திருப்போம் மீதமுள்ள அதை செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் அதனை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments