Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரை

தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இது போன்ற பரப்புரையை நாம் செய்து கொண்டிருக்கின்றோம். எனக்கான மிகப்பெரிய பெருமை, காலை மாண்புமிகு தமிழ்நாட்டினுடைய துணை முதலமைச்சர் அவர்களுடைய தலைமையில் அங்கே உலகத் தாய்மொழி தினத்தை நாம் கொண்டாடிவிட்டு, இப்பொழுது நேரடியாக என்னுடைய திருவெறும்பூர் தொகுதி மக்களாக இருக்கின்ற உங்களைச் சந்திக்க நான் இங்கே வருகை தந்திருக்கின்றேன்.
உரையாற்று கின்றவர்கள் சொன்னது போல, எதற்காக ஸ்டாலின் தொடர வேண்டும்? உதாரணமாக இங்கே சொன்ன பல்வேறு விதமான திட்டங்களில் கொஞ்சம் தான் சொல்லியிருக்கார், இன்னும் நிறைய இருக்கு. அந்தத் திட்டங்கள் எல்லாம் தொடர வேண்டும் என்பதற்காக.
குறிப்பாக, இப்பொழுது தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1000 ரூபாய் நாம் இன்றைக்கு வழங்குகிறோம் என்று சொன்னால், அது நின்று விடக் கூடாது என்பதற்காக ஸ்டாலின் தொடர வேண்டும்.
இப்பொழுது வாங்கக்கூடிய மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் என்பது வருகின்ற ஜூன் மாதத்திற்குப் பிறகு அது 2000 ரூபாயாக வழங்கப்படும் என்று சொன்னாரே, அது தொடர வேண்டும் என்று சொன்னால் ஸ்டாலின் தொடர வேண்டும்.


இப்படி ஒவ்வொரு திட்டம் சார்ந்து, அந்தத் திட்டமெல்லாம் என்றும் நம் பயன்பாட்டிற்கு வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று சொன்னால், அதற்கு நம்முடைய மாண்புமிகு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தொடர வேண்டும் என்பதற்காகத்தான்.
குறிப்பாக, சென்டிமென்ட்ல எல்லாம் பல பேருக்கு நம்பிக்கை இருக்காது, முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் அதை நம்பவும் மாட்டார்கள். இருந்தாலும் அதையெல்லாம் கடந்து நான் சொல்றேன். 2021-ஆம் ஆண்டு கிட்டத்தட்ட எல்லாரும் சொன்னார்கள், “கட்டம் சரியில்லை, கட்டம் சரியில்லை” என்று சொன்னார்கள். கட்டம் சரியில்லைன்னு சொன்னவனுக்குத்தான் கட்டம் சரியில்லாமல் போச்சு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கட்டத்தைத் தவிர்த்து இன்னைக்கு சட்டத்தை மீட்பவராக இன்னைக்கு இருக்கிறார் நம்முடைய தலைவர் அவர்கள்.
இப்ப புதுசா ரெண்டு நாளைக்கு முன்னாடி பாரதிய ஜனதாவினுடைய தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்திலே பேசும்போது சொன்னார், “கிரகம் சரியில்லை” என்று இப்ப புதுசா ஆரம்பிச்சிருக்காரு. அப்ப நாங்க முடிவு பண்ணிட்டோம், கண்டிப்பா இந்த முறை 200-க்கும் மேல நாம் ஜெயிக்கத்தான் போகிறோம் என்கின்றதை கொண்டு வந்திருக்கோம்.
“இப்பவும் ₹1,000-க்கு இருக்கக்கூடிய ஒரு சென்டிமென்ட். நாம வந்து 2021

காலத்துல நம்முடைய தமிழ்நாட்டோட முதலமைச்சர் 2020-ஆம் ஆண்டு சொன்னாரு, ‘கொரோனா நிதி’ என்று வரும்பொழுது அதை நீங்கள் இன்னைக்கு இருக்கக்கூடிய நம்முடைய தமிழ் சமூகத்திற்கு ரேஷன் கார்டுக்கு ஒரு ₹5,000 நீங்கள் வழங்க வேண்டும் என்று சொன்ன பொழுது…”

“ஒரு சென்டிமென்ட் சிம்பிளா நான் சொல்லிறேன். அப்போ கொரோனா வந்தப்போ நம்ம தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தப்போ சொன்னாரு, எல்லா ரேஷன் கார்டுக்கும் 5000 ரூபாய் தயவு செஞ்சு கொடுத்திருங்க. ஏன்னா கொரோனா காலத்தினால இன்னைக்கு வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு இருக்கு என்று சொன்ன பொழுது, எதிர்க்கட்சியா உட்கார்ந்துட்டு நீங்க என்ன வேணா சொல்லலாம், நீங்க ஆட்சிக்கு வந்து பாருங்க அப்பதான் தெரியும் என்று சொல்லிவிட்டு வெறும் 1000 ரூபாய் மட்டும் தந்தார்.
அன்றைக்கே தமிழ்நாட்டினுடைய இன்றைய முதலமைச்சர் சட்டமன்றத்தில் எழுந்து சொன்னார், ‘கண்டிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரும், மீதம் இருக்கின்ற 4000 ரூபாயை இந்த முத்துவேல் ஸ்டாலின் முதலமைச்சராகி தருவேன்’ என்று சொன்னார். அந்த 1000 – 4000 சென்டிமென்ட் இப்போ திரும்பவும் வருது.
என்ன வந்திருக்குன்னா, நாம மாதம் மாதம் 1000 ரூபாய் கொடுக்குறத நிறுத்துறதுக்கு அண்ணன்

சொன்னாங்க பாத்தீங்களா, இத வழக்கைத் தொடர்வதற்கு அஸ்வின் குமார் உபாத்தியாயா என்கிற ஒரு பாரதிய ஜனதா ஆர்.எஸ்.எஸ்-ஐ சார்ந்தவர் இதை நிறுத்தணும் அப்படிங்கறதுக்காக நீதிமன்றம் செல்வதற்கு அவங்க தயாராக இருந்ததை நம்முடைய தமிழ்நாட்டு முதலமைச்சர் உள்வாங்கிக் கொண்டு, ‘நீ 1000 ரூபாய் நிறுத்துனா என்னுடைய தாய்மார்களுக்கு நான் 5000 ரூபாய் தருவேன்’ என்று சொன்னார் பாத்தீங்களா, அந்த 1000 – 5000 சென்டிமென்ட் இப்போ ஒர்க் அவுட் ஆகப்போகுது.
தமிழ்நாட்டு முதலமைச்சர் சொன்ன மாதிரி ‘வெல்வோம் 200, படைப்போம் வரலாறு’ அப்படின்னு சொன்னாருங்க பாத்தீங்களா அதெல்லாம் இப்போ நடக்கப்போகுது என்பதற்காக சொல்றேன். ஏன் ஸ்டாலின் தொடர வேண்டும்? ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுதும் 20 லட்சம் புள்ளைங்க வயிறார சாப்பிட்டுட்டு பள்ளிக்கூடத்துக்கு போறாங்க பாத்தீங்களா, அந்த திட்டம் தொடர வேண்டும் என்று சொன்னால் ஸ்டாலின் தொடர வேண்டும்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாக ஏறத்தாழ 42 லட்சம் பேர் பயன்பட்டு அதுல கிட்டத்தட்ட ரெண்டரை லட்சம் பேர் இன்னைக்கு வேலைக்கு போயிருக்காங்க பாத்தீங்களா, அந்த திட்டம் தொடர வேண்டும் என்று சொன்னால் ஸ்டாலின் தொடர வேண்டும். இன்னைக்கு ஒட்டுமொத்தமாக 13 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை இங்கே கொண்டு வந்து ஏறத்தாழ நேரடியாகவும் மறைமுகமாகவும் 35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறோம் பாத்தீங்களா, அது தொடர வேண்டும் என்று சொன்னால் ஸ்டாலின் தொடர வேண்டும்.
நம்முடைய தாய்மார்கள் எல்லாம் விடியல் பயணம் என்ற விதத்துல இன்னைக்கு பேருந்துல பயணம் செய்து மாதம் தோறும் குறைந்தபட்சம் 888 ரூபாய் நீங்க மிச்சம் பண்றீங்கன்னு ஒரு ஆய்வு அறிக்கை சொல்லுது பாத்தீங்களா, அது தொடர வேண்டும் என்று சொன்னால் ஸ்டாலின் தொடர வேண்டும். இப்படி அடுக்கடுக்கான பல்வேறு திட்டங்களைச் சொல்ல முடியும்.
இங்கே நம்முடைய அன்புச் சகோதரர் செந்தில் வேல் சொன்னது மாதிரி,

பள்ளி சார்ந்து எங்களுடைய துறை சார்ந்து இவ்வளவு திட்டங்களைச் சொல்றோம் இல்ல, இதுல யார் தெரியுமா பாராட்டுறாங்க? ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஒன்றிய பாரதிய ஜனதா சொல்லுது, ‘ஆமா கல்வியில நீங்க சிறந்ததா இருக்கீங்க’னு ஒரு பக்கம் சொல்லிட்டு, நம்ம பிள்ளைங்க படிக்க வேண்டிய பிள்ளைகளுக்குத் தர வேண்டிய 3548 கோடி ரூபாயை இன்னைக்கு நிறுத்தி வைக்குது என்று சொன்னால், அதை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூடியவர் யாருன்னு பார்த்தா நம்ம முத்தமிழ் அறிஞர் ஸ்டாலின். நம்முடைய தன்மானமிக்க தலைவர் தொடர வேண்டும் என்பதற்காகத் தான் இது போன்ற பரப்புரையை நாம் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றோம்.”

தான் மக்களைச் சந்திக்க வரும்போது தனது தந்தை சொத்தாகத் தந்த புன்னகையையும், தொகுதி மக்களின் நம்பிக்கையையும் ஏந்தி வருகிறேன்
ஓரணையில் தமிழ்நாடு: தமிழக முதலமைச்சரின் இத்திட்டத்திற்காக இயக்கத்தைச் சார்ந்தவர்கள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்ததை நினைவு கூர்கிறார்.
அரவணைக்கும் அரசு: தற்போதைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தேமுதிக போன்ற கட்சிகளும் இணைந்து வருவதைச் சுட்டிக்காட்டி, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் இடமாக அறிவாலயம் திகழ்கிறது
.
ஆதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், அரசின் திட்டங்களைப் பாராட்டிப் பேசியதுடன், மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வாழ்த்துகளுடன் மு.க. ஸ்டாலின் அவர்களே மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என வாழ்த்தியதை நெகிழ்ச்சியுடன் பார்த்தோம்
வெற்றி முழக்கம்: ‘ஓரணையில் தமிழ்நாடு’ என்ற இலக்கின்படி, இன்று அனைத்து அணிகளும் முதலமைச்சருக்கு பின்னால் அணிவகுத்து விற்பதை பார்த்து பெருமிதம் கொள்கிறோம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *