திருச்சியி கள்ளக்குழி பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு திமுக சார்பில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தில்லைநகர், பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி போன்ற பகுதிகளை விட கல்லுக்குழி மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இப்பகுதியில் ரூ.2000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், முன்னர் மிகவும் மோசமான நிலையில் இருந்த பட்டறை பகுதி சாலை மற்றும் எம்ஜிஆர் சிலை சாலை உள்ளிட்ட சாலைகள் அனைத்தும் தற்போது சிமெண்ட் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.மேலும், 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள கொல்லங்குளம் பகுதி ரூ.40 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ளது

குடமுருட்டி பாலம் முதல் மத்திய பேருந்து நிலையம், கலைஞர் பேருந்து நிலையம் வரை 40 கோடி மதிப்பிள் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து வசதி மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.காந்தி மார்க்கெட்டுக்கு மாற்றாக கல்லுக்குடி மார்க்கெட்டை பெரிய சந்தையாக மாற்றியதும், ஐடி பார்க் அமைத்து வேலைவாய்ப்புகள் உருவாக்கியதும் திமுக அரசின் முக்கிய சாதனைகள் என அவர் குறிப்பிட்டார். மேலும், பல ஆண்டுகளாக வசித்து வந்த மக்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு தற்போது இலவச குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், இதனால் பகுதியின் நில மதிப்பு உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பொதுக்கூட்டத்தின் போது பள்ளி வேன் வந்தபோது தனது பேச்சை நிறுத்தி வாகனத்திற்கு வழிவிடுமாறு கேட்டுக் கொண்ட சம்பவம் கவனம் பெற்றது.மேலும், ரூ.20 கோடி மதிப்பில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு, அந்தப் பள்ளி பன்னிரெண்டாம் வகுப்பு வரை மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் தெரிவித்தார்.இறுதியாக, திமுக ஆட்சி மீண்டும் அமைந்தால் இப்பகுதி இன்னும் வேகமாக முன்னேறும் என்றும், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கேட்டுக் கொண்டார்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://www.threads.net/@trichy_vision
*Youtube*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
பரப்புரைக்கு இடையில் பள்ளி வாகனத்திற்கு வழி விட சொன்ன அமைச்சர்



Comments