திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளரும், கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு இன்று திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட கருமண்டபம் புதுத்தெரு, மாந்தோப்பு, தெற்கு தெரு, ராம் நகர், சோழகர் நகர், விஸ்வாஷ் நகர், R.M.S காலனி சமத்துவநகர், ஆல்பா நகர், சத்யா நகர், அருணா அவென்யூ, ஜே.கே. நகர், காவேரி நகர், ராம்ஜி நகர், மில் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் அமைச்சர் நேருவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த பிரச்சாரத்தின் போது, ஒரு சிறுமி பிரச்சார வாகனத்தில் ஏறி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்ற சட்டம், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த மகளிர் உரிமைத்தொகை மற்றும் எண்ணற்ற சாதனை திட்டங்கள் குறித்து மக்களிடையே பேசி வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரம் சென்ற இடமெல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வழிநெடுகிலும் திரண்டு நின்று அமைச்சருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

பொதுமக்கள் ஆரவாரத்துடன் அவருக்குப் பொன்னாடை அணிவித்தும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்த பிரச்சாரத்தின் போது மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், வட்டச் செயலாளர் பி ஆர் பி பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தோழமைக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு



Comments