திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 23வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தை திமுக முதன்மை செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு துவக்கி வைத்தார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி மாநகராட்சி 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் க. சுரேஷ்குமார் அவர்களை அறிமுகப்படுத்தியும் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்களிக்க கோரியும் பிப்ரவரி 6 காலை 11 மணிக்கு உறையூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு திமுக முதன்மைச் செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான மாண்புமிகு கே .என். நேரு அவர்கள் பங்கேற்று உரையாற்றி வாக்கு சேகரித்தார்.

திமுக வட்ட செயலாளர்கள் ரவி, கோவிந்தராஜன் CPI வட்டச் செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.
திமுக மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வைரமணி மாநகர செயலாளர்மு. அன்பழகன் பகுதி செயலாளர் கண்ணன் இளைஞரணி செயலாளர் ஜானகிராமன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் திராவிடமணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் செல்வராஜ் மதிமுக மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காங்கிரஸ் கட்சி பகுதி செயலாளர் ராஜ்மோகன் விடுதலை சிறுத்தைகள் தமிழா தன் ஏஐடியுசிமாவட்ட தலைவர் நடராஜா மாதர் சம்மேளனம் ஆயிஷா ,வை .புஷ்பம்ExMC மாணவர் பெருமன்றம் இப்ராஹிம் தொலைபேசி தொழிற்சங்கத் தலைவர் காமராஜ் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.
தேர்தல் பணிக்குழு கன்வீனர் சிவசூரியன் தலைமை வகித்தார் பகுதி செயலாளர் பாலமுரளி வரவேற்புரையாற்றினார் காந்திபுரம் சண்முகம் நன்றி கூறினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           129
129                           
 
 
 
 
 
 
 
 

 07 February, 2022
 07 February, 2022





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments