Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பள்ளிவாசல் முன்பு வாக்கு சேகரித்த அமைச்சர் நேரு

No image available

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், கழக முதன்மைச் செயலாளருமான அமைச்சர் கே.என்.நேரு. இன்று திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீமநகர் பகுதியில் அமைந்துள்ள துருப்பு பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் தொழுகைக்காக கூடியிருந்தனர்.

தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமிய சகோதரர்களை நேரில் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உதயசூரியன் சின்னத்தில் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, கமால் முஸ்தபா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*

*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *