திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் இயற்கை எய்தி விட்டதால் அந்த தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்று எம்எம்ஏ செளந்திரபாண்டியன், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சம்பவம், திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் நேரு, தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் லால்குடி தொகுதியில் மேற்கொண்ட ஆய்வு குறித்து புகைப்படங்களுடன் பதிவுச் செய்திருந்தார். அதற்கு, எம்எல்ஏ செளந்திரபாண்டியன், தன்னை அழைக்காத காரணத்தினால் இப்படி ஒரு கமெண்ட் பதிவிட்டு அதிரடித்துள்ளார்.

இந்நிலையில் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தனியார் மருத்துவமனையில் மகப்பேறு புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசியது..

கேள்வி : லால்குடி எம்எல்ஏ சௌவுந்தர பாண்டியன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்துக்கு உங்களுடைய பதில் என்ன??
லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் அவர்களை நேரில் அழைத்து பேசி விட்டேன்.

கேள்வி : ஏற்கனவே சௌந்தரபாண்டியன் ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு கொடுத்துள்ளார் ? ..
தம்பி போப்பா… போப்பா என்ற கோபமாக பதிலை தெரிவித்துவிட்டு காரில் சென்றுவிட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           129
129                           
 
 
 
 
 
 
 
 

 16 June, 2024
 16 June, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments