சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ம தி மு க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,
திமுக விற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நெருடல் இருப்பது போல் தோன்றும் ஆனால் அது நீர் விடுத்த வடு போல மறைந்து போகும்.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, ராகுல் காந்தியை சந்தித்து பேசி உள்ளார் தேர்தல் தொடர்பாகவும் பேசியதாக செய்தி வந்துள்ளது இதில் எதுவும் நெருடல் இருக்காது.

அதிமுகவை மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் எவ்வளவு அவமானப் படுத்தினாலும் அதை அனைத்தையும் சகித்துக் கொண்டிருந்தவர்கள் தான் முன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமி. அவர் கனிமொழி – ராகுல் காந்தி சந்திப்பு குறித்து பேச தகுதியற்றவர்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி சுவாமிநாதன் அவருடைய வரம்புகளை மீறிவிட்டார் என்பதுதான் என்னுடைய கருத்து. அவர் கொடுத்த தீர்ப்பை விமர்சனம் செய்வது தவறு கிடையாது.
அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தற்போது நடப்பதை விட அதிகமாக நடந்துள்ளது திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கிற பொழுது முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார் குற்றம் செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்படுகிறார்கள்.

பாஜக அரசு வெறிபிடித்து போய் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
இந்தி திணிப்புக்கு எதிராக ராணுவத்தையே எதிர்கொண்டு பல உயிர்களை பலி கொடுத்து நிமிர்ந்து நின்ற மாநிலம் தமிழ்நாடு என்பதை மனதில் கொள்ளாமல் அலட்சியமாகவும் அகஙகாரமாகவும்
பாஜகவினர் ஹிந்தியை திணிக்க பார்க்கிறார்கள் அப்படி செய்யும் பொழுது எதிர் விளைவுகளை அவர்கள் நிச்சயம் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.
மத்திய அரசு வரும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை நிச்சயம் செய்வார்கள். இருந்த பொழுதும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டும் என பாரதியார் குறித்தும் சங்க இலக்கியங்கள் குறித்தும் இந்தி மொழியில் எழுதி வைத்து தமிழ்நாட்டை இதுவரை இல்லாத அளவிற்கு புகழ்வார்கள்
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விடலாம் என பிரதமர் மோடி காணும் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது.
திமுக கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என முதலமைச்சர் கூறியுள்ளார் அதையே நானும் வழிமொழிகிறேன்.

திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக தலைமையிடம் பேசி அதன் பின் முடிவெடுப்போம் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments