திருச்சிராப்பள்ளி மாவட்டம், சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ரெட்டிமாங்குடி பகுதியை சேர்ந்த பாலமுருகன், த.பெ. பொன்னர் அதே பகுதியை சேர்ந்த தெய்வமணி 35/18, த.பெ.கோபால் என்பவரை காதலித்த போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாகவும், பின்பு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாகவும், பாலமுருகனின் உறவினர்கள் கர்ப்பத்தை கலைக்க கூறி தன்னை தாக்கியதாக மேற்படி பாலமுருகன் மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி பாதிக்கபட்ட தெய்வமணி என்பவர் கொடுத்த புகாருக்கு லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்.10/2004, U/s. 417, 294(b), 323, 506(ii) IPC ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் பாலமுருகன், அவரது தந்தை பொன்னர், உறவினர்களான செல்வி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர்.
இந்நிலையில் எதிரி பாலமுருகன் என்பவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருந்தும் மேற்படி வழக்கின் நீதிமன்ற விசாரணையின் போது தான் காதலித்த தெய்வமணி என்ற பெண்னுடன் வாழ விரும்புவதாக கூறி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மேற்படி வழக்கின் எதிரிகள் நீதிமன்ற விசாரனைக்கு ஒத்துழைக்காமலும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்ததால், நீதிமன்றத்தால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் (39), த.பெ. கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடந்த 17.01.2018 அன்று மதியம் சுமார் 02.00 மணியளவில் தெய்வமணி அவரது அண்ணன் மற்றும் தாயாருன் பேசிக்கொண்டிருந்த போது, தனது தாய் தந்தை கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு,
தெய்வமணி என்பவரை கட்டையால் தாக்கி, பின்பு தான் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து கழுத்து, வயிறு மற்றும் தலையில் பீர் பாட்டிலால் குத்தியதில் மேற்படி தெய்வமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக, இறந்து போனவரின் அண்ணன் பெரியண்ணன் 40/25, த.பெ. கோபால், கீழத்தெரு, ரெட்டிமாங்குடி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிறுகனூர் காவல் நிலைய குற்ற எண். 152/18, U/s 323, 302, 506(ii) IPC ன் படி 17.01.2018 அன்று குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, அன்றே எதிரி கண்ணன்(39), த.பெ. கிருஷ்ணமூர்த்தி என்பவரை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டது. இவ்வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வி. சுமதி, ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (20.11.2025) திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா, அவர்கள் எதிரி – கண்ணன்(39), த.பெ. கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய். 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த சிறுகனூர் காவல் நிலைய நீதிமன்ற காவலர் தினேஷ், என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments