திருவெறும்பூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ண சமுத்திரம் பகுதியில் வசிப்பவர் மூக்கையன் காய்கறி வியாபாரி இவரது மனைவி ராஜேஸ்வரி துப்புரவு பணியாளர். இவர்கள் இருவரும் இன்று காலை
தங்களது பணிக்கு சென்று விட்டனர் இந்நிலையில் இவர்களது மகள் கனிஷ்கா (17 ) பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார் இன்று காலை வழக்கம் போல் சீருடை அணிந்து பள்ளிக்குச் செல்ல கிளம்பியவர் திடீரென்று வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி தொங்கியுள்ளார்.
அருகிலுள்ள வீட்டுக்காரர்கள் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்டு சந்தேகப்பட்டு வீட்டின் பூட்டை உடைத்து திறந்து பார்க்கையில் வீட்டுக்கு உள்ள மின்விசிறியில் தூக்கில் கனிஷ்கா தொங்கிக் கொண்டு இருந்தது தெரிந்தது உடனடியாக அவரை காப்பாற்ற துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர் அங்கு மருத்துவர்கள் கனிஷ்காவை பரிசோதனை செய்து ஏற்கனவே கனிஷ்கா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கனிஷ்காவின் தந்தையார் மூக்கையன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி ஏன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்? என்ன காரணம்? என்று விசாரணை செய்து வருகின்றனர் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments