காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவின் பேரில் இவர்கள் குணசீலத்தில் முகாமிட்டுள்ளனர். முசிறி, குணசீலம் மணக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளை
கண்காணித்துள்ளனர்.வெள்ள பெருக்கால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக மீட்பதற்கு தேவையான படகு மற்றும் மரங்கள் விழுந்தால் அதனை உடனடியாக அகற்றுவதற்கான உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
என்டிஆர்எப் உதவி கமாண்டட் அகிலேஷ் குமார் உத்தரவின் பேரில்தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் திருநெல்வேலி ராதாபுரத்தில் இருந்து வந்துள்ளனர் 30 வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக என் டி ஆர் எப் ஆய்வாளர் கலையரசன் தெரிவித்துள்ளார்.
Comments