திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 5 வது மண்ட லத்துக்குட்பட்ட 27 வது வார்டு மூலைக் கொல்லை தெரு மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு மேயர் மு.அன்பழகன் அவா்கள் தலைமை வகித்து உதவி ஆணையர் சென்னு கிருஷ்ண, உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் முன்னிலையில் பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்ட றிந்து மனுக்களை பெற்றார். அப்பகுதியில் நடைபெற்ற திட்ட பணிகள் குறித்தும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற திட்ட பணிகள் குறித்தும் பொது மக்களிடம் எடுத்துரைத்தார்.
இந்தக் கூட்டத்தில், மூலக்கொல்லைத் தெரு, வள்ளுவர் தெரு, சவேரியார் கோவில் தெரு, மல்லிகைபுரம், ஜெனரல் பஜார், வண்ணாரப்பேட்டை, ஜெனரல் பஜார், பென்சனர், தென்னூர், தெருபட்டாபிராமன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.
மேயர் அன்பழகன் அவர்கள் மாநகராட்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சேவைகளை மேம்படுத்திட எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும், திறந்தவெளி இடங்கள், சாலையோரப்பகுதிகள், குளக்கரைகள் மற்றும் ஏரிக்கரைகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது குறித்தும்,
பூங்காக்களை குடியிருப்போர் நலச்சங்கம் உள்ள தன்னார்வலர்களைக்
கொண்டு பராமரிப்பு செய்வது,
தூய்மைப்பணிகளை மேம்படுத்த குப்பைகளை பிரித்து வழங்குதல், சேகரம் செய்வதில் உள்ள குறைபாடுகளை களைதல் மற்றும் குப்பைகளை தெருவோரங்களில் வீசி எறிதல் தவிர்த்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், வீட்டுக் காய்கறிக் கழிவுகளைக் கொண்டு வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித் தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பது குறித்தும், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புனரமைப்பு செய்து முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டுவர மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்
தெருநாய்கள் மற்றும் வீதிகளில் உலாவரும் கால்நடைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மையங்கள் செயல்படுத்துதல்,
பொது மற்றும் சமுதாயக் கழிப்பறைகள் முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வருதல்
மற்றும் குறைபாடுகளை சரிசெய்தல், நீர்நிலைகள் மாசுபடுவதை தடுத்து நீராதாரங்களை பாதுகாக்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப்பைகளை தவிர்த்து மறுசுழற்சிக்கு உகந்த பொருள்களை பயன்படுத்துதல், நகராட்சி வளர்ச்சி திட்டப் பணிகளில் சிறப்பான பங்களிப்பினை வழங்கி வரும் தன்னார்வலர்களை ஊக்குவித்து கௌரவித்தல், மாவட்ட ஆட்சித் தலைவரால் எடுத்துக்கொள்ள தெரிவிக்கப்படும் ப்ரத்யேக பொருள்கள் குறித்து பகுதி சபா கூட்டத்தில் பொதுமக்களிடம் விவாதிக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டு பகுதிகளிலும் துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில்
அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதி சபா கூட்டம் நடைபெற்று பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர். தகுதியுள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments