தமிழ்நாடு முதல்வர் – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி மாநகர கழகம் சார்பாக தஞ்சைபால்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில். மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் ஏற்பாட்டில்
நீர் மோர் பந்தலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் – மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் தர்பூசணி இளநீர் வெள்ளரிப்பிஞ்சு மற்றும் குளிர்பானங்கள் ஆகியவைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் , மாவட்ட மாநகர நிர்வாகிகள் , சேகரன், லீலாவேலு, செங்குட்டுவன், மூக்கன், சந்திரமோகன், பொன் செல்லையா, நூர்கான், தமிழ்ச்செல்வம், சரோஜினி மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள் விஜயகுமார், நீலமேகம், தர்மராஜ், மோகன், பாபு, ராஜ்முகம்மது, மணிவேல், சிவக்குமார், மாநகரக்கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் வட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision



Comments