Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

முதலமைச்சராக விஜய் வருவதை யாராலும் மாற்ற முடியாது – தவெக நிர்வாகிகள் உறுதி

திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு விசில் சின்னத்தில் வாக்கு கேட்டு பாலக்கரை பகுதி தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எடத்தெரு அண்ணா சிலை, பருப்புக்காரர் தெரு, பாலக்கரை, காளியம்மன் கோவில் தெரு, உள்ளிட்ட பல பகுதிகளில் டிரம்ஸ் மற்றும் கொம்பு வாத்தியங்கள் முழங்கிட, ஆடல் பாடலுடன் வீடுவீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாலக்கரை நிர்வாகி ஜெரால்டு மில்டன் கூறுகையில்,.. கிழக்கு தொகுதி மக்கள் உங்கள் தலைவர் நேரில் வந்து பார்க்க முடியவில்லை என்ற கவலைப்படுகிறார்கள், எல்லாருக்கும் உள்ள ஆசைதான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் வர முடியாத சூழல் உள்ளதுடன் அனுமதியும் கிடைக்கப்பெறுவதில்லை, வெற்றி பெற்ற பிறகு எல்லா பகுதிக்கும் வருவதாகம், எல்லா மக்களையும் சந்திப்பதாக தெரிவித்துள்ளார். அவரை வெற்றி பெற வைப்பது மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும், சட்டமன்ற தேர்தலில் ஐந்து நிமிடம் யோசித்து வாக்கு செலுத்தினார்கள் என்றால் அவர் வெற்றி பெற்றுவிடுவார் என்பதை தாண்டி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அதற்காகத்தான் உழைக்கிறோம்.

வீட்டுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறோம், தலைமையில் இருந்து அனுமதி கிடைத்ததால் தற்போது பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். மலைக்கோட்டை பாலக்கரை மற்றும் ஏர்போர்ட் என மூன்று பகுதிகளாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், போட்டி போட்டுக் கொண்டு நாங்கள் அதிக வாக்குகளை பெற வேலை பார்த்து வருகிறோம் என்றார்.

விஜய் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டது திருச்சியில் தான் எல்லாரிடத்திலும் அவர் ஓட்டு கேட்டுவிட்டார், ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுள்ளார் மக்கள் யோசிக்க வேண்டும் இந்த வாய்ப்பை மக்கள் தவற விட வேண்டாம், எல்லாரும் சேர்ந்து அவரை ஜெயிக்க வைப்பது தான் நமது கடமை.

ஜனநாயகன் படம் வந்தால் முதல் ஷோவுக்கு செல்வோம், ஜனநாயகன் விஷயத்தில் என்ன நடக்கிறது என்பது தலைமைக்கு தெரியும், எங்களது வேலை அவரை ஜெயிக்க வைப்பது மட்டும்தான் அதற்காக பணியாற்றி வருகிறோம் ஜெயித்தபிறகு முதலமைச்சர் என்று அவர் பெயரை போட்டு படம் வரவேண்டும் என்பதுதான் எங்களது ஆசை, அதனை யாராலும் மாற்ற முடியாது எல்லாம் கடவுள் தான்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *