2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், வாக்குப்பதிவு நடைபெறும் (23.04.2026) அன்று வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்கும் முன் தேர்தல் ஆணையத்தால் வழங்கபட்ட புகைப்பட அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் (EPIC).
அடையாள அட்டை சமர்பிக்க தவறும்பட்சத்தில் வாக்காளர்களின் புகைப்பட அட்டைக்கு மாற்றாக பின்வரும் அடையாள ஆவணங்களில் ஏதேனும் பயன்படுத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையத்தால்
அடையாள ஒன்றை அறிவுறத்தப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு (Aadhaar card), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பணி அட்டை,
வங்கி அல்லது அஞ்சலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகங்கள் (passbooks), தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு ஸ்மாரட் கார்டு (Health insurance smart card), ஓட்டுநர் உரிமம் (Driving License), பான்கார்டு (Pan card),
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் (NPR) கீழ் இந்தியப் பதிவாளர் ஜெனரல் (RGI) வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு,
இந்திய கடவுச்சீட்டு (Indian Passport), புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் (Pension Document), மத்திய / மாநில அரசுகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சேவை அடையாள அட்டைகள்.
சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் / சட்டமன்ற உறுப்பினர்கள் மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கபட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தனித்துவமான மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (UDID Card).
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments