திருச்சி மாநகராட்சி 25 வது வார்டுக்குட்பட்ட உய்யக்கொண்டான் பகுதியில் உள்ள ஆதிநகர் ,சாந்த ஷீலா நகரில் 40 வருடத்திற்கு மேல் 1000த்திற்கும் மேற்பட்டோர்
வசித்து வருகின்றனர். தங்கள் வீடுகளுக்கு மின், குடிநீர் இணைப்பு பெற்றும் வீட்டு வரி செலுத்தி வருகின்றனர்.
மேலும் முன்னாள் மாவட்ட ஆட்சியர் சாந்தஷீலாவால் பட்டா வழங்கிய பகுதிகளாகும். இப்பகுதியில் நகர்ப்புற விரிவாக்கம் என்ற பெயரில் அங்குள்ள வீடுகளை இடிக்க முயற்சிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும்,
ஆதிநகர், சாந்த ஷீலாநகர் பகுதி மக்களின் குடியிருப்பு மட்டும், வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலும்,
பட்டா வழங்கிய பகுதியில் உள்ள வீடுகளை
இடிக்காமலும் நகர்புற விரிவாக்கத்தை மேற்கொள்ள வலியுறுத்தி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதிக்குழு சார்பில் செவ்வாய் அன்று உய்யக்கொண்டான் கால்வாய் கிழக்கு கரை பகுதியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு கிளை செயலாளர் ஹரிபாஸ்கர் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் எஸ். ஸ்ரீதர் துவக்கி வைத்தார். மேற்கு பகுதி செயலாளர் ரபீக் அகமத்,மூத்த தோழர்கள் சம்பத்,நடராஜன், பழனியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அன்வர் உசேன்,
சீனிவாசன், சீதா வெங்கடேஷ், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உண்ணாவிரதத்தை முடித்து வைத்து மாநகர் மாவட்ட செயலாளர் கோவி வெற்றிச்செல்வம் சிறப்புரை ஆற்றினார்.
உண்ணாவிரதத்தில் பகுதிக்குழு உறுப்பினர்கள் மோகன், வள்ளி, சந்திரன், கணேசன், ஷேக் மொய்தீன், வேதநாயகம், அப்துல்கயூம் உள்பட அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆறுமுகம் நன்றி கூறினார்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments