Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கரூரில் நிரந்தர அருங்காட்சியகம் திறப்பு – முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது

தொல்லியல் மரபு மன்ற பாதுகாப்புப் பயிற்சி தொடக்கவிழா, வரலாற்றுத்துறையின் நிரந்தர அருங்காட்சியகத்தின் தொடக்கவிழா, கரூர் மாவட்டத்தின் புகழ்மித இடங்களை வெளிப்படுத்தும் வரைபடத்தை வெளியிடும் விழா ஆகிய மூன்று விழாக்கள் முப்பெரும் விழாவாக 19.02.2026 வியாழக்கிழமை அன்று கலையரங்கத்தில் நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு வரலாற்றுத் துறையின் தலைவரும், இணைப் பேராசிரியருமான முனைவர் து. செல்வக்குமார் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. முன்னதாக வரலாற்றுத்துறையின் ஆசிரியர்கள் மாணவர்களின் முயற்சியில் அமைக்கப்பட்ட நிரந்தர அருங்காட்சியகம் கல்லூரி முதல்வர் முனைவர் சா. சுதா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், பழம்பொருட்கள் சேகரிப்பாளருமான எ. டேவிட் பால்ராஜ் அவர்களால் சேகரிக்கப்பட்ட வரலாற்றுப்பொருட்கள் காட்சியாக அமைக்கப்பட்டது. அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் செ. சேவியர், க. ரெத்தினகுமார், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ச. செந்தில்குமார் ஆகியோரால் உருவாக்கப்பட்ட “கரூர் மாவட்டத்தின் புகழ்மிகு இடங்களை வெளிப்படுத்தும் வரைபடம்” கல்லூரி முதல்வர் முனைவர் சா. சுதா அவர்களால் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

முனைவர் தொடர்ந்து
திருச்சிராப்பள்ளி மண்டலக் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் க. இராதாகிருஷ்ணன் அவர்கள் காணொலி வாயிலாக உரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சா. சுதா அவர்கள் தலைமையேற்று தனது வாழ்த்துச் செய்தியை வழங்கினார். புகழ்பெற்ற வானியல் ஆய்வாளர், பறவையியலாளர், தொன்மையியல் ஆர்வலர், மானுடவியலாளருமான கா. பாலகிருஷ்ணன் அவர்கள் “தொல்மாந்தரைத் தேடி” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி, ஆதி மனிதர்களின் பல்வேறு வகையான தோற்றங்கள், ஆதி மனிதர்களின் வாழ்விடம், குகை ஓவியங்கள், அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகள், வரலாற்றில் அவர்கள் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதையும், இன்றைய வரலாற்று மாணவர்கள் தொடர்ச்சியாக தொல்பொருள், தொன்மை தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டு பேசினார்.

இறுதியாக வரலாற்றுத் துறையின் உதவிப் பேராசிரியர் ச.அமிர்தலிங்கம் அவர்கள் நன்றியுரை கூறி நாட்டுப்பண்ணுடன் முப்பெரும் விழா நிறைவு பெற்றது. வரலாற்றுத் துறையின் பேராசிரியர்கள், பிறதுறைகளின் பேராசிரியர்கள், 250க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் இதில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *