108 திவ்ய தேசங்களில் இரண்டாவதாக விளங்குவதும், திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோயிலுமான உறையூர் கமலவல்லிநாச்சியார் ஸ்ரீரங்கநாதரின் மற்றொரு பத்தினியாக விளங்குவதால் இக்கோவிலில் பெருமாளுக்கென தனி உற்சவமூர்த்தி இல்லை.
மாறாக ஆண்டுக்குஒருமுறை திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் உற்சவர் நம்பெருமாள் பங்குனி நட்சத்திரத்தன்று இக்கோவிலில் எழுந்தருளி கமலவல்லி தாயாருடன் சேர்ந்து பக்தர்களுக்கு சேவைசாதிப்பார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயாருக்கு நடப்பதைப்போன்று ஆண்டுதோறும் 10 நாள் திருஅத்யயன உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் முதல் 5 நாட்கள் திருமொழி திருநாளாகவும், இரண்டாவது 5 நாட்கள் திருவாய்மொழி விழாவாக கொண்டாடப்படுகிறது.
கடந்த 8ம்தேதி தொடங்கி நடைபெற்றுவந்த விழாவின் திருவாய்மொழி திருநாளின் முதல்நாளான இன்றுமாலை கமலவல்லி நாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து தங்க பல்லக்கில் புறப்பட்டு உள்வீதிஉலா கண்டு,
5:35 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு பரமபதவாசல் வழியாக வெளியேவந்த நாச்சியார் பக்தர்கள் மத்தியில் எழுந்தருளி பின்னர் வழிநடை உபயங்கள்கண்டருளி திருவாய்மொழி மண்டபத்தில் ஆழ்வார்கள் முன்னிலையில் காட்சியளித்தார்.
அவருக்கு திருவாய்மொழி பாசுரங்கள் அரையர்கள் வாசிக்க கேட்டருளி பின்னர் இரவு நாச்சியார் வீணை ஏகாந்தத்துடன் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
நாச்சியாரை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும், திருமணத்தடை நீங்கும் என்பதால் பெருந்திரளான பக்தர்கள் கமலவல்லி நாச்சியாரை சேவித்துச்சென்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments