திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த 51 வயது மதிக்கத்தக்க ஆண், சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 25.07.2025 அன்று இரவு 10.00 மணி அளவில் அனுமதிக்கப்பட்டார்
பல்வேறு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் 27.07.2025 அன்று காலை 06.08 மணிக்கு அவர் மூளைச்சாவு அடைந்தார்.
இந்த மூளைச்சாவு மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை உணர்ந்த இறந்தவரின் உறவினர்கள் முழுமனதுடன் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன் வந்தார்கள். மேலும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி அவருடைய உறுப்புகளான கல்லீரல், கருவிழிகள், தோல் மற்றும் சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டது.
திருச்சியில் அவரது உடல்திசு பொருத்தம் உள்ள ஒரு சிறுநீரகம் ஒரு தனியார் மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும்.
இரண்டு கருவிழிகள் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி வழங்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளிக்கு மருத்துவமனை முதல்வர் தலைமையில் அரசு மரியாதை செய்யப்பட்டு வழியனுப்பப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgFhttps://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments