Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பஞ்சப்பூர் பெரியார் காய்கறி அங்காடி: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
ஆணையர் திரு. லி. மதுபாலன், அவர்களது செய்தி வெளியீடு
பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி, பஞ்சப்பூர்

வார்டு எண்.62 பஞ்சப்பூரில் 22.10 ஏக்கர் பரப்பளவில் ரூ.236.00 கோடி மதிப்பீட்டில், பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி கட்டும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 09.05.2025ம் தேதியன்று அடிக்கல் நாட்டப்பட்டு திட்டப் பணிகள் துவங்கப்பட்டது.

இத்திட்டப்பணிக்கான நிதியாதாரங்களான உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி (I&A) நிதி ரூ.120.00 கோடி, முனிசிபல் (Municipal Bond) பத்திரம் ரூ.100.00 கோடி, மூலதன மான்ய (CGF) நிதி ரூ.8.00 கோடி மற்றும் மாநகராட்சி பொது நிதி ரூ.8.00 கோடி ஆகிய நிதியாதாரங்களின் படி இத்திட்டப்பணி நடைபெற்று வருகிறது.

முனிசிபல் பத்திரங்கள் வாயிலாக ரூ.100 கோடி நிதி திரட்டுவதற்கு மும்பை பங்கு சந்தை வாயிலாக பத்திரங்கள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 05.02.2026 இன்று நடைபெற்ற ஏலத்தில் மூன்று முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டதில், ரூ.100 கோடி இம்மாநகராட்சிக்கு வரப்பெற்றுள்ளது. இதன் வாயிலாக மேற்கண்ட திட்டப்பணி விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆணையர் அவர்களால் தெரிவிக்கப் பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *