திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் பாரிவள்ளல் இன்று தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். லால்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான ஸ்ரீதர் அவர்களிடம் பாரிவள்ளல் தனது மனுவைச் சமர்ப்பித்தார்.முன்னதாக அனைத்துக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வேட்புமனு தாக்கல்

செய்ய வந்த பாரிவள்ளலுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உற்சாக வரவேற்பு அளித்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.இந்த நிகழ்வில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் குமார், தொழிலதிபர் முருகவேல், பார்க்கவ குல மக்கள் இயக்கம் சத்யநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
உற்சாக வரவேற்பில் லால்குடியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பாரிவள்ளல்



Comments