திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் ஸ்ரீ ராம சமுத்திரம் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த தீமிதி திருவிழாவில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர், நடைபெற்று முடிந்த பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி இந்திய ஜனநாயக கட்சி தொட்டியம் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


முன்னதாக ஸ்ரீராம சமுத்திரம் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் மரக்கன்றுகளுடன், பாரிவேந்தர் புகைப்படம் பொறித்த பெரிய பைகள் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக கட்சி திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கருணாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments