இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மேற்குப் பகுதி குழு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதில் (மனமகிழ் மன்றம் ) ( licence number FL2-19/2024-2025 ) தம்பி பெரியசாமி தோப்பு குழுமணி மெயின் ரோடு மீன் மார்க்கெட் எதிரில் நேற்று முதல் இயங்கி வருகிறது.

ஏழை எளிய மக்கள் வசித்து வரும் பகுதி மற்றும் அந்த வழியாக பல கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இது போன்ற சூழ்நிலையில் இந்த மது கடை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகவும், இந்த மது கடை இங்கு வைப்பதில் எந்த உடன்பாடும் கிடையாது.

பல குடும்பங்களில் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மதுக்கடையை பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கும்படி பொது மக்களின் சார்பாகவும் வருங்கால மாணவர்கள் இளைஞர்களின் சார்பாகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இந்தப் பகுதியில்தான் நூற்றுக்கணக்கான மக்கள் பெண்கள் உள்பட வந்து செல்லும் மீன் மார்க்கெட் மற்றும் மருத்துவமனை, அலுவலகங்கள் இயங்கி வருவதும் , நடுத்தர மக்கள் வசிக்கும் வளர்ந்து வரும் மாநகரப் பகுதியாகவும் உள்ளதையும் கருத்தில் கொண்டு மனமகிழ் மன்றத்தின் உரிமத்தை ரத்து செய்து மக்கள் நலன் காத்திட வேண்டுகிறோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments