திருச்சி மின்பகிர்மான வட்டம் பெருநகரம் சார்பில் ஆகஸ்ட் 2025 மாதத்தில் மின்நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெறவுள்ளன என்று மேற்பார்வை பொறியாளர் A.செல்வி அறிவித்துள்ளார்.

இந்த கூட்டங்கள், திருச்சி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அலுவலகங்களில் கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெறும்:
முசிறி கோட்டம்– 01.08.2025 (வெள்ளிக்கிழமை)
துறையூர் கோட்டம் – 05.08.2025 (செவ்வாய்க்கிழமை)
திருவரங்கம் கோட்டம்– 08.08.2025 (இரண்டாம் வெள்ளிக்கிழமை)
இலால்குடி கோட்டம்– 12.08.2025 (இரண்டாம் செவ்வாய்க்கிழமை)

திருச்சி நகரிய கோட்டம் – 19.08.2025 (மூன்றாம் செவ்வாய்க்கிழமை)
மணப்பாறை கோட்டம்– 26.08.2025 (நான்காம் செவ்வாய்க்கிழமை)
இந்த கூட்டங்கள் பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர்கள் தங்களுடைய மின் தொடர்பான புகார்களை நேரில் தெரிவித்து உடனடி தீர்வு பெறும் வகையில் நடத்தப்படுகின்றன.

மின்நுகர்வோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து தீர்வு பெறலாம் என மின் வாரியத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments