திருச்சி பீமநகர் மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் சாலை ஓரம் சென்றவரை கொலை செய்ய விரட்டி கும்பல் சென்றனர்

உயிர் தப்பிக்க அருகே உள்ள புதிய காவலர் குடியிருப்பில் உள்ளே நுழைந்த நபரை ஐந்து பேர் கொண்ட கும்பல் விரட்டிச் சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
காவலர் குடியிருப்பு வீட்டில் தஞ்சம் அடைந்த நபரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கும்பல் தப்பி ஓடினர். ஒருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்.

திருச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ள நிலையில் திருச்சி மாநகரில் பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில் குறிப்பாக காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

படுகொலை செய்யப்பட்டவர்
தாமரைச்செல்வன் வயது 24
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்பது போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது..
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments