திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்மலை ரயில்வே காலனி (மாநகராட்சி வார்டு எண் 48)-யில் குடியிருப்பு பகுதி வாக்காளர்கள்
பாகம் எண் 136-ல் ‘C’ TYPE, ‘I’ TYPE, North ‘D’ TYPE பகுதியில் வரிசை எண் 1 முதல் 517 வரை மொத்தம் 517 வாக்காளர்கள்.
பாகம் எண் 138-ல் ‘H’ TYPE, ‘G’ TYPE, ‘B’ TYPE, ‘A’ TYPE பகுதியில் வரிசை எண் 270 முதல் 509 வரை மொத்தம் 240 வாக்காளர்கள்.
பாகம் எண் 139-ல் South ‘D’ TYPE, ‘MB’ TYPE, ‘MC’ TYPE, ‘MF’ TYPE, ‘MH’ TYPE, South ‘D’ TYPE பகுதியில் வரிசை எண் 1 முதல் 930 வரை மொத்தம் 930 வாக்காளர்கள்.
ஆகு மொத்தம் மூன்று பாகங்கள் (பூத்ஸ்) சேர்த்து 1687 வாக்காளர்கள் குடியிருப்பு. மேற்கண்ட குடியிருப்பு பகுதிகள் முற்றிலுமாக இடிக்கப்பட்டு புதிய பணிமனைகளும், இன்டீப் அலுவலக கட்டிடங்களும் கட்டப்பட உள்ளது. மேலும் காலிடமாகவும் உள்ளது.
மேற்கண்ட குடியிருப்பு பகுதிகளில் வசித்தவர்கள் தற்போது குடியிருக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
மேற்கண்டவர்களின் கணக்கீட்டு படிவங்களை (Enumeration Form) திருவாளீர் தங்களது ஆளும் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமிருந்து (BLO) பெற்று அதை விதிகளுக்கு புறம்பாக பூர்த்தி செய்து
மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) வழங்கி வருவதாக தெரிய வருகிறது. மேற்கண்ட வாக்காளர்களின் உண்மையினை (Genuinity) கண்டறிந்து அவர்களின் வாக்குரிமையை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார் ப.குமார் அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments