திருச்சி பன்னாட்டு விமான நிலையம் முழுவதும் (பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை)எஸ்பிஜி கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று இரவு தூத்துக்குடியில் இருந்து பாரத பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் வருகை புரிந்தார். அங்கு நான்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
சற்று நேரத்தில் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டு செல்லக்கூடிய ஹெலிகாப்டருக்கு சோதனை ஓட்டம் நிகழ்த்தப்பட்டது.இன்று காலை பதினோரு மணி அளவில் நட்சத்திர விடுதியில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சோழ தேசத்திற்கு செல்கிறார்.

மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.விமான நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து பயணிகளும் முழு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மோப்ப நாய்கள் ,வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் விமான நிலையம் முழுவதையும் சோதனை மேற்கொண்டு இருக்கின்றனர் .



Comments