திருச்சிராப்பள்ளி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் & தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புர வாழ்வாதார இயக்கம் சார்பில் இன்று (24.01.2026) நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் கலந்து கொண்டு தேர்வு பெற்ற 462 பணிநாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
பணிநியமனம் பெற்றவர்கள் தங்கள் பணிவாழ்வில் கடின உழைப்பு, நேரம் தவறாமை ஆகியவற்றை பின்பற்றவேண்டும். மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட திறன்களைக் கற்றுக்கொண்டு தங்களைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ள வேண்டுமென அறிவுரை கூறினார்.
மேலும், இன்று நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்புமகாமில் படித்த வேலைவாய்ப்பற்ற 2145 ஆண்கள், 2327 பெண்கள் (22 மாற்றுத்திறானாளிகள் உட்பட) 4472 நபர்கள் கலந்துகொண்டனர். இதில் 201 தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, நேர்காணல் நடத்தினர். இம்முகாமில் 462 (6 மாற்றுத்திறனாளிகள் உட்பட) வேலைநாடுநர்கள் பணிநியமனம் பெற்றனர். 607 வேலைநாடுநர்கள் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில், உதவி ஆட்சியர் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபிசானு, அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) இரா.அருணகிரி, துணை இயக்குனர் ச.பிரபாவதி, உதவி இயக்குநர் (வேலைவாய்ப்பு) செ.ரமேஷ்குமார் அவர்கள், பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் முனைவர்.ஜா.பிரின்சி மெர்லின், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்க உதவித் திட்ட அலுவலர் ப.ஈஸ்வர மூர்த்தி, அரசு அலுவலர்கள், தனியார்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments