திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மகாத்மா காந்தி தேசிய உறுதியளிப்பு சட்டத்தை சிதைத்து அதன் திட்ட பணிகளை சீர்குலைத்து நிதி ஒதுக்கீட்டை குறைப்பது மாநிலங்களில் நிதிச் சுமையை அதிகரித்து திட்டத்தை முடக்குவதாகும். வேலை நாட்களை குறைப்பது, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, நமது நாட்டின் முதுகெலும்பு என்று சொன்ன அண்ணல் காந்தியடிகளின் பெயரை இத்திட்டத்தில் இருந்து நீக்குவது,
100 நாள் வேலையை இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க துடிக்கும் “ஒன்றிய பா.ஜ.க அரசின் சதி செயலுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுகவையும் கண்டித்து, அச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் நாளை 24.12.2025 புதன்கிழமை காலை 10:00 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற இருக்கின்றது.
திருவெறும்பூர் தெற்கு ஒன்றியம் – குண்டூர் ஊராட்சி, திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம் வாழவந்தான்கோட்டை ஊராட்சி,
மணப்பாறை ஒன்றியம் பன்னாங்கொம்பு ஊராட்சி, மருங்காபுரி வடக்கு ஒன்றியம் வேம்பனூர் ஊராட்சி, மருங்காபுரி தெற்கு ஒன்றியம் செவல்பட்டி ஊராட்சி, மருங்காபுரி மத்திய ஒன்றியம் கவுண்டம்பட்டி ஊராட்சி, வையம்பட்டி வடக்கு ஒன்றியம் வி.பெரியபட்டி பூலாம்பட்டி ஊராட்சி, வையம்பட்டி தெற்கு ஒன்றியம் ஏலமணம் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் நடைபெறுகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் மாநில மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கழக முன்னோடிகள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாது கலந்து கொண்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகின்றோம் என்று கூறினார் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments