Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

“ஏய்! யப்பா! அங்க…. மாடு வருதுபா…. புடிச்சா ஒரு சைக்கிளு, தங்கம்” – கலைகட்டப்போகும் விராலிமலை ஜல்லிக்கட்டு!!

ஏய்! யப்பா! யாருப்பா! அங்க… அடேய் மாடு வருது வருதுபாருடா…. எப்பா முதலமைச்சர் வர நேரமாயிருச்சு.. எல்லாம் ரெடியா இருங்க.. ஜல்லிக்கட்டுக்கே உரிய கமெண்ட்ரிகளோடு கடந்த ஆண்டு ஆரவாரத்துடன் தொடங்கிய விராலிமலை ஜல்லிக்கட்டை மறந்துவிட முடியாது. உலகின் மிகப்பெரிய ஜல்லிக்கட்டு போட்டியாக விராலிமலையில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனை படைத்தது

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் கோவில் குளம் பட்டமரத்தான் ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இம்முறை விராலிமலை ஜல்லிக்கட்டு உலக அளவில் சாதனை புரிய வேண்டும் என்பதற்காகவும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரால் விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வருடமும் சரித்திர ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த களம் அமைத்து வருகின்றனர்.

9 மணி நேரத்தில் 1,353 காளைகள் அவிழ்க்கப்பட்ட ஒரே இடம் விராலிமலை என்ற பெருமையுடன் கின்னஸ் சாதனை படைத்தது. கடந்த வருடம் சிறந்த காளைக்கான பரிசினை இராப்பூசல் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரது காளை களத்தில் 50 வினாடிகள் விளையாடி காரினை வாங்கி சென்றது.

21 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக திருச்சி மாவட்டம் கீழக்கல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த முருகானந்தம் காரினை பரிசாக வென்றனர் கடந்த வருடம் .

 

இந்நிலையில் கொரோனா காலகட்டத்திற்கு மத்தியில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது. தமிழக அரசின் நிபந்தனைகளின்படி ஜன.17-ம் தேதி விராலிமலையில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் எம்ஜிஆர் பிறந்த நாளும் சேர்ந்து வருவதால் இந்த வருடம் 17ம் தேதி தமிழகத்திலேயே விராலிமலை களைகட்டி காணப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 

Advertisement

மேலும் விராலிமலையில் நடைபெற உள்ள மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழாவிற்கான கால்கோள் விழா எனப்படும் பந்தல்கால் நடும் விழா நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *