Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

புலிவலம் ஓயாசிஸ் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையம்: கலெக்டர் சரவணன் ஆய்வு

2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி மற்றும் புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026-க்கான தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உரிய பாதுகாப்பு வசதிகளுடன் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்.

அந்தவகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் திருச்சிராப்பள்ளி கிழக்கு, 138 – மணப்பாறை, 139 – ஸ்ரீரங்கம், 140 – திருச்சிராப்பள்ளி மேற்கு, 141 142 திருவெறும்பூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை மையமாக திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியும், 143 – இலால்குடி, 144 – மண்ணச்சநல்லூர், 145 – முசிறி, 146 – துறையூர் (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரியும் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான அறைகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள், கட்டுப்பாட்டு அறைகள், செய்தியாளர் அறைகள், பார்வையாளர்கள் அறைகள் என பல்வேறு அறைகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் இன்று (25.03.2026) திருச்சிராப்பள்ளி புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்.இ.ஆ.ப., அவர்கள் தேவையான அடிப்படை வசதிகள், தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தவும், தேவையான குடிநீர் வசதி, போதுமான கழிப்பறை வசதி போன்ற வசதிகளை ஏற்படுத்திடவும், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆ.பாலாஜி, உதவி ஆட்சியர் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபிசானு, அவர்கள், முசிறி ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்தியா அவர்கள், பொதுப்பணித்துறை சார்
செயற்பொறியாளர்கள் அன்பரசி (கட்டிடங்கள்), தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல் துறையினர், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *