திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், அங்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜி.ராஜசேகரன் அவர்கள், நடிகர் விஜயின் பிரச்சாரத்தை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “சிலிண்டர் விலை குறித்து குறை கூறும் விஜய், டெல்லி சென்று அதனை குறைக்க முயற்சி செய்ததில்லை. அதே சமயம், திருச்சி கிழக்கு தொகுதிக்கு வெறும் ஒரு நாள் வந்து செல்வது, மக்களின் பிரச்சனைகளை உணர்வதற்கான உண்மையான முயற்சியாக தெரியவில்லை.அது வெறும் விளம்பர நோக்கத்திற்கான நடவடிக்கையாகவே தோன்றுகிறது” என்றார்.

மேலும் ஒரு நாளில் இங்கு உள்ள மக்களின் வாழ்க்கை சிக்கல்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. மக்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து, அவர்களுடன் இணைந்து செயல்படுவதே ஒரு தலைவரின் கடமை.எனவும் குறிப்பிட்டார். மேலும் எம்ஜிஆர் போல் போஸ் கொடுப்பதெல்லாம் பார்க்கவே சிரிப்பாக உள்ளது என்று விமர்சித்தார்

அதனைத் தொடர்ந்து,நான் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவன். திருச்சி மக்களின் பிரச்சனைகளை நன்கு அறிந்தவன். அவர்களுக்காக தொடர்ந்து உழைப்பதே எனது நோக்கம் என்று தெரிவித்தார்.
அதேபோல் சினிமா தோற்றம் குறித்து மறைமுகமாக விமர்சித்த அவர், “வெறும் வெளிப்புற தோற்றம் அல்லது போஸ் கொடுப்பதன் மூலம் ஒருவர் தலைவராக முடியாது.மக்களுக்காக உண்மையாக உழைப்பதே முக்கியம்” என்று கூறினார்
திருச்சிவிஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சிவிஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
எம்ஜிஆர் போல் போஸ்- பார்க்கவே சிரிப்பாக உள்ளது – விஜய்யை விமர்சித்த ராஜசேகர்



Comments