பெரம்பலூர் மாவட்ட கழக முன்னாள் செயலாளர் – மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் எஸ்.சிவசுப்ரமணியன் 5 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு, மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில், கே.என்.அருண்நேரு எம்.பி மலரஞ்சலி செலுத்தினார்.

இதில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் எம்.ராஜ்குமார், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், திமுக கழக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி-யின் நேர்முக உதவியாளர், ராஜாசிதம்பரம் மனைவி ரா.சௌந்திரம் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். சொக்கநாதபுரம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த செளந்திரம் உடலுக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், கே.என்.அருண்நேரு எம்.பி., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன்,
மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி,மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், ந.ஜெகதீஷ்வரன், எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம்,
மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் ப.செந்தில்நாதன், பெரம்பலூர் ஒன்றிய பெருந்தலைவர் மீனா அண்ணாதுரை, வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், துணை தலைவர் எம்.ரெங்கராஜ், வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, அரும்பாவூர் பேரூர் கழக செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன்,

பூலாம்பாடி பேரூர் கழக செயலாளர் செல்வலட்சுமி சேகர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், ஆர்.அருண், மா.பிரபாகரன், தொ.மு.ச.மாவட்ட கவுண்சில் பேரவை தலைவர் கே.கே.எம்.குமார், தொ.மு.ச.கவுண்சில் பேரவை மாவட்ட செயலாளர் ஆர்.ரெங்கசாமி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் முத்தரசன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி(எ) அப்துல்பாரூக், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆர்.தங்கராசு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால்,தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.முருகேசன்,

மாவட்ட மகளிர் அணி விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெ.கார்மேகம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.ராசா, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments