தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில தலைவர் திருமாறன் மற்றும் இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக் குமார் இன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் தரிசனம் செய்த பின்னர் ரங்கா ரங்கநாதர் கோபுர முன்பாக செய்தியாளர்களை கூறுகையில்… பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அனைத்து சமூக மக்களுக்காக பெருமளவில் போராடியவர்.
அவருக்கு திருச்சியில் 150 அடி உயரத்தில் சிலை அமைக்க வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள், இதற்காக இடத்தை தேர்வு செய்து கொண்டிருக்கிறோம். திருச்சி ஒரு மத்திய பகுதி, மேலும் எல்லா சமூக மக்களுக்காக போராடிய ராமானுஜர் போன்ற பலர் வாழ்ந்த இடம்.
எனவே விரைவில் சிலை அமைக்க உள்ளோம். தமிழகம் சமீப நாட்களாக நாத்திக பூமி என்கிற தோற்த்தில் மாறி வருகிறது. ஆனால் நாயன்மார்கள் ஆழ்வார்கள் போன்ற பலர் வாழ்ந்த ஆன்மீக பூமி நம் தமிழகம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments